சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சேதன பசளையின், மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்பட்டமையினால் குறித்த சேதனை பசளையினை இறக்குமதி செய்வதில்லை என இலங்கை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது. தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ள அதேவேளை இந்த விடயத்தினால் இலங்கை, சீனா உறவில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சேதன பசளை மாதிரியின் சோதனையில் இலங்கை பிழை விட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. .
குறித்த உரத்தை 600 C இல் கருத்தடை செய்ய வேண்டும், இதனால் அனைத்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும் அதிக வெப்பநிலையால் கொல்லப்படுகின்றன. ஒப்பந்தத்தில் இந்த விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுளள்து. இதுவே கரிம உரங்களுக்கான பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரநிலைகள்.
எனினும், இலங்கை விவாசாய திணைக்களத்தின், தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் (NPQS), மூன்று நாட்கள் மட்டும் மேற்கூறப்பட்ட செயற்பாட்டை செய்துவிட்டு, மாதிரியில் எர்வினியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாக அறிவித்துளளது.
ஆகவே திறந்த மனு கோரல் மூலமாக கோரப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட சீன நிறுவனத்ததோடு, ஒப்பந்த அடிப்படையில் சரியான முறையில் தொடர்பாடி இந்த விடயத்தை முடிக்க வேண்டும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துளளது. சுமூகமா இந்த பிரச்னைக்கு தீர்வினை பெறுவதே இரண்டு நாடுகளது நட்புறவுக்கும் நன்மையென இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
