சீமெந்து விலை தீர்மானிக்கப்பட்டது

சீமெந்தின் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் சீமெந்து பாக் ஒன்றின் விலையினை 200 ரூபாவால் அதிகரிக்க நிறுவனங்கள் கோரிக்கை வைத்த போதும், கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன 100 ரூபா அதிகரிப்புக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளார்.


அதன் அடிப்படையில் 50 கிலோ கிராம் சீமெந்து பாக் ஒன்றின் விலை 97 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் நாளை(11.10) முதல் அமுலுக்கு வரும் என நம்ப்பப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் மூலம் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீமெந்து விலை தீர்மானிக்கப்பட்டது

Social Share

Leave a Reply