உலககிண்ண 20-20 தொடருக்கான மாற்றம் செய்யப்பட்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பத்தும் நிசங்க சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். லஹிரு மதுசங்க உபாதை காரணமாக ஓமானுக்கு செல்லவில்லை. அவருக்கு பதிலாக பத்தும் நிசங்க சேர்க்கப்பட்டுள்ளார்.
சுழற் பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு பதிலாக அகில தனஞ்செய அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். கமிந்து மென்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை பினுர பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுளார். ஓமான் அணியுடனான தொடரில் விக்கெட்களை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார அணியில் இணைக்கப்பட்டுள்ளார்
நுவான் பிரதீப் ஓமான் அணியுடனான முதற் போட்டியில் உபாதையடைந்துள்ள நிலையில் லஹிரு குமார அந்த இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உலக கிண்ண 20-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உபாதைகள் காரணமாக அணிக்குள் மாற்றம் செய்வதற்கான இறுதி நாள் இன்று. அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று இந்த அணியினை அறிவித்துள்ளது.
இலங்கை அணி 18 ஆம் திகதி நபீபியா அணியுடன் முதல் தெரிவுகான் போட்டியில் விளையாடவுள்ளது. மூன்று தெரிவுகான் போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே உலக கிண்ண தொடரில் விளையாட முடியும்.
IPL கிரிக்கெட் தொடரில் விளையாடிய வனிது ஹசரங்க, டுஸ்மந்த சமீர ஆகியோர் இன்று இலங்கை அணியோடு இணைந்துள்ளனர்.
இலங்கை அணியின் ஆலோசகராக உலககிண்ண தொடருக்கு நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்த்தன நாளைய தினம் இலங்கை அணியோடு இணையவுள்ளார். இவர்கள் மூவரும் அணியோடு இணைவது மைதானங்கள் பற்றிய நிலையினை அறிந்து கொள்ள மிக பெரியளவில் உதவுமென அணியின் தலைவர் தஸூன் சாணக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அணி விபரம்
தஸூன் சாணக்க(தலைவர்), தனஞ்செய டி சில்வா, குசல் பெரேரா, டினேஷ் சந்திமால், பத்தும் நிசங்க, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ச, சமிக்க கருணாரட்ன,வனிது ஹசரங்க, டுஸ்மந்த சமீர, லஹிரு குமார, மகேஷ் தீக்சன, அகில தனஞ்செய, பினுர பெர்னாண்டோ
