நீர் குழாயில் வெடிப்பு – பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

பத்தரமுல்ல, கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

கிருத பணிகளை முன்னெடுப்பதற்காக குறித்த பிரதேசங்களுக்கு இன்று(28.04) இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே சுத்திகரிப்பு நிலையத்தின் மின் விநியோக குழையில் ஏற்பட்ட முறிவு மற்றும் பத்தரமுல்லை பொல்துவ பிரதான நீர் விநியோக பாதையில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply