‘மலையகம் – 200’ – விடேச முத்திரை வெளியிட அரசாங்கம் தீர்மானம்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து மக்களிடமிருந்தும் கருத்துகள் மற்றும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.

மலையக கலை, கலாச்சார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களிடமும் ஏதேனும் யோசனை அல்லது மாதிரியை (முத்திரை எவ்வாறு இருக்க வேண்டும் என வரைதல்) தயாரிக்ககூடியதாக இருந்தால் அவற்றை உரிய வகையில் மே மாதம் 10ம் திகதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு ‘பதிவு’ தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முகவரி
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இலக்கம் 45,
புனித மைக்கல் வீதி ,
கொழும்பு – 03.

Social Share

Leave a Reply