தமிழர் பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரசுக்கு தெரியப்படுத்த போராட்டம் ஒன்று நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
விவசாயிகள் அண்மைக்கலாக பல சிக்கல் நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர். உரம் விலையேற்றம. கிருமிநாசினிகள் இல்லை, எரிபொருள் விலையேற்றத்தினாலும் அடிப்படை பொருட்களின் விலையேற்றத்தினாலும் வாகன கூலி அதிகரிப்பு மற்றும் வேலை செய்பவர்களின் கூலி அதிகரிப்பு என பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
சேதன பசளைகளை பாவிப்பது தொடர்பிலும், அவற்றை வாங்குவது தொடர்பிலும் அறிவின்மை போன்ற சிக்கல் நிலைகளும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இம்முறை பெரும் போக நெல் விளைச்சல் மிக பெரியளவில் பாதிப்புகளை வழங்கும் என்ற நிலை காணப்படுகிறது. ஆகவே பெரும்போக விளைச்சல் ஆரம்பிக்கும் தருவாயில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நாடாத்துவதன் மூலம் அரசாங்கத்தை விழிப்புணர்ச்சியடைய செய்வதோடு, அரசாங்கம் விவசாயிகளுக்காக ஏதேனும் நல திட்டத்தை செயற்படுத்தும் என்ற நோக்கிலேயே குறித்த கவனியீர்ப்பு போராட்டத்தை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
அரசாங்கத்தின் சேதன பசளைக்கான உடனடியான மாற்று திட்டங்களும் விவசாயிகளுக்கு சிக்கல் நிலையினை தோற்றுவித்துள்ளது.