நுவரெலியா கேம்பிரிட்ஜ் கல்லூரியின் கண்காட்சி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளில் நவீன தொழில்நுட்ப கண்காட்சி இன்று (03.05.2023) அதிபர் திரு.ஜே.ஏ.நிக்லஸ் தலைமையில், நீர் வளங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றும், நாளையும் நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சயில், நவீன காலத்திற்கேற்ப தமது வாழக்கை மற்றும் இதர செயற்பாடுகளை எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நிர்மாணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நவீன உலகை வெல்வதற்காக நவீன தொழில்நுட்பம் சார்ந்த தமது திறமைகளை மேலும் வெளிபடுத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என இதன்போது ஆலோசனை வழங்கியதாகவும், இந்த கண்காட்சி வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு மாணவர்களை வழிநடத்திய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமுக்கு நன்றியை தெரிவித்ததோடு, திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டி உற்சாகப்படுத்தியதாகவும் ஜீவன் மேலும் கூறியுள்ளார்.

இந்ந நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், எனது இணைப்பு செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், பிரத்தியேக உதவியாளர் தயாளன் குமாரசுவாமி
அதிபர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply