வெலிகம பிரதேசத்தில் இன்று (03:05) இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிறு பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 09 வயது பிள்ளையும் அடங்குவதுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.