மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா பயணித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு கூடியிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
அந்தச் சந்திப்பில், நாடுகளின் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பொதுநலவாய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற ‘Fireside Chat’ நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.