தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சருடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமானுக்கு இடையிலான சாமந்திபோன்று கொழும்பில் உள்ள அவரது அமைச்சகத்தில் இன்று (08.05) இடம்பெற்றுள்ளது.

நட்புறவின் நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை – இந்திய சமூதாய பேரவையின் பிரதிநிதி சிவராமன் மற்றும் காந்தி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய நாளையும், நாளை மறுதினமும் மலையகதின் பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

குறித்த குழுவினரால் மக்களுக்காக உதவி திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply