எரிபொருள் விலையேற்றம் ஜனாதிபதியினால் தடுக்கப்பட்டது

எரிபொருட்களுக்கான விலையினை அதிகரிக்க வேண்டிய நிலை காணபப்டுவதாக நேற்றைய தினம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்திருந்தார். சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலையேறியுள்ளமையினால் விலையினை அதிகரிக்க வேண்டும். இல்லாவிடில் பாரிய நட்டம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஏற்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருட்களின் விலையினை ஏற்றி தொடர்ந்தும் மக்கள் மீது சுமையினை கூட்டாமல் மாற்று வழி பற்றி சிந்துக்குமாறு வலு சக்தி அமைச்சர் உதயன் கம்பன்பிலவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

“அண்மையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேறியுள்ளமையினால் மக்கள் கஷ்டபப்டுகின்றனர். அவர்களுக்கான நிவாரண உதவி திட்டங்களை தயார் செய்யுமாறும்” ஜனாதிபதியினால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் ஜனாதிபதியினால் தடுக்கப்பட்டது

Social Share

Leave a Reply