போதைப்பொருள் தடுப்பு முன்னோடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நேற்று (16.05) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண உமிழ்நீர் பரிசோதனை கருவிகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்படும் குறித்த சோதனைக் கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக சிறுநீர் மாதிரி பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட சாரதியை அருகில் உள்ள மருத்துவமனையில் பொலிஸாரால் ஒப்படைக்கபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.