இலங்கையின் சாதரண குடிமகன் ஒருவர் குடிக்கக் கூடிய விலையில் மதுபானம் ஒன்றை தயாரிக்க அனுமதி தாருங்கள் என மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் அதிகம் நுகரப்படும் “கல்” வகை மதுபானம் 750 ml போத்தல் ஒன்று 3000 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதுவே காற் போத்தல் 750 ரூபா. சாதாரண நாட் கூலிக்கு வேலை செய்யும் ஒருவரினால் இந்த விலைக்கு மது அருந்த முடியாது. இதன் காரணமாக இவ்வாறன மக்கள் கசிப்பு உட்பட உடல் நலத்துக்கு கேடான ஸ்பிரிட் வகைகளை அருந்துகின்றனர். ஆகவே கல் சாராயத்துக்கும், கசிப்புக்கும் இடைப்பட்ட பெறுமதியில் ஒரு மதுபானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு நிதி இராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இராஜங்க அமைச்சர் இதற்கு எந்த முடிவினையும் வழங்கவில்லை.
நிதி இராஜங்க அமைச்சர், மதுவரி திணைக்களம், மற்றும் மதுபான உற்பத்தியாளர்களுக்கிடையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் மதுபான விற்பனை 45 சதவீதத்தினால் வீழிச்சியடைந்துள்ளதாகவும், அரசாங்கம் மதுபானனங்களுக்கு வரிவுகளை அதிகரித்துள்ளமையும் இதற்கு முக்கியமான காரணம் என மது உற்பத்தியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மதுபானத்தின் விலையில் 85 சதவீதம் வரியாக மட்டும் செல்வதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.