மூன்று புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17.05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply