லிட்ரோ நிறுவனத்தின் புதிய தீர்மானம்!

சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் தொடரும் எரிவாயுவுக்கான கேள்வியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முனையத்தின் ஊடாக நாளாந்தம் 30,000 முதல் 40,000 வரையான எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply