தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (01.06) ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

தேசிய சேமிப்பு வங்கியானது பொருளாதார கட்டமைப்பிற்குள் அதன் செயற்திறன் மற்றும் சமூக ,சுற்றுச்சூழல் துறைகளுடனான அதன் உறவை பிரதிபலிக்கும் வகையில் “எங்கள் பலத்தை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளுடன் அதன் ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2022 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் செயற்திறன், மூலோபாயம், நிறுவன நிர்வாகம் உள்ளிட்ட தேசிய சேமிப்பு வங்கி தொடர்பில் விரிவான பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் பீரிஸ் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version