கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்றுடன் அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதி இன்று (09.06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் மற்றும் 20 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.