முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை மாணவர்கள்!

இவ்வருடம் க.பொ.த பரீட்சை எழுதிய மமா/வ/ஹைபொரஸ்ட் த.வி
பாடசாலை மாணவர்கள் ஏனைய மாணவர்கள் அனைவர்க்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

பரீட்சை விதிமுறைகளை நேர்த்தியாக பின்பற்றி, மேற்பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளதுடன், கடமையாற்றிய பரீட்சகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், பரீட்சை நிறைவு பெற்றதன் பின்னர் தாங்கள் பரீட்சை எழுத பயன்படுத்திய அருணோதய இந்து கல்லூரி பாடசாலையின் பரீட்சை மண்டபத்தையும் பரீட்சை காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கழிவறைகளையும் சுத்தப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரிய செயலாகவும், ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

எதிர்காலத்தை வளமாக்கும் இவ்வாறான மாணவர்களுக்கு வீ மீடியாவின் வாழ்த்துக்கள்.

முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை  மாணவர்கள்!

முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை  மாணவர்கள்!

முன்மாதிரியாக திகழ்ந்த ஹைபொரஸ்ட் த.வி பாடசாலை  மாணவர்கள்!

Social Share

Leave a Reply