அதிக விலைக்கு பொருட்களை விற்ற வர்த்தகர்கள் கைது!

முட்டை மற்றும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றும் விலை பதிவிடாமல் விற்பனை செய்த குற்றத்தின் பேரில் 19 வர்த்தகர்கள் நேற்று (09.06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த 19 வர்த்தகர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் சாமிமலை ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குறித்த வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், நுவரெலியா மாவட்டம் முழுவதும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply