சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்!

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னர் கடமையாற்றிய திகிரி கொப்பேகடுவ, அண்மையில் பதவி விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு நவின் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply