ஜனாதிபதியின் தொல்பொருள் மறுசீரமைப்புக்கு சாணக்கியன் கருத்து வெளியீடு

“தொல்லியல் துறை இயக்குனர் அனைத்து பிரச்சனைகளிலும் ஓர் பகுதியாக செயற்பட்டவர். எல்லாவற்றுக்கும் பின்னால் இருந்து பிரதான மூளையாக செயற்பட்டவர் அதற்கு பொறுப்பாக இருந்த அமைச்சராகும். எது எப்படி இருப்பினும் ஜனாதிபதி உறுதியளித்ததன் பிரகாரம் தொல்பொருள் பாதுகாப்பு கருதிய மற்றும் அவ் திட்டத்தின் மறுசீரமைப்புக்கான புதிய தேசிய திட்டத்தை நாங்கள் முன்னோக்கி பார்க்கின்றோம்” என பாரளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர். அனுர மானதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தொல் பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடினார்” எனவும் மேலும் சாணக்கியன் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது “நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா ? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரியைக் கேட்டார்” எனவும் பாரளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக விளமர்சித்ததுடன் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஜெனரல் அனுர மானதுங்க தனது பதிவி விலகளுக்கான கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் வழங்கியுள்ளதாக புத்தசாசன, சமய, கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply