பாடசாலை உபகரணங்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலைப் பைகள், அப்பியாச புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் இருப்பதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு போன்ற மேலும் சில காரணங்களால் இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை 20வீதம் முதல் 25வீதம் வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply