இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மஹேந்திரா சிங் டோனி சென்னை IPS அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு IPL சூதாட்ட விவகாரம் குறித்து IPS அதிகாரி சம்பத் குமார் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பு செய்யும் வகையில் அந்த தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை, டோனிக்கு அதனுடன் தொடர்புள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கில் குற்றவாளிகள் இனம் காணப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இரண்டு வருடங்கள் IPL தொடரில் பங்குபற்ற முடியாமல் தடை செய்யப்பட்டன. குறித்த சூதாட்டத்தில் அணிகளது உரிமையாளர்கள், இணை உரிமையாளர்கள் ஈடுபட்டது விசாரணைகளில் வெளிவந்தது. இவ்வாறான நிலையில் குறித்த தீர்ப்பு தொடர்பில் பொலிஸ் அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளது நீதிமன்ற அவமதிப்பு எனவும், அத்தோடு தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும் டோனி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.