வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5 நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த (30.05.2023) இரவு தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக ஒன்று கூடி நின்றோர் என 10 நபர்களை பொலிசார் கைது செய்திருந்தரைமயும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply