போதைப் பொருள் பாவனைக்கு எதிராக தரணிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வவுனியா காத்தார்சின்னக்குளம், தரணிக்குளம் கிராமத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதனை இல்லாதொழிக்க உதவுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனிடம் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள் நேற்று (14.06) மாலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் போதைப் பொருள் பாவனையாளர் ஒருவரும் பங்கேற்றதுடன், தன்னை போதைப் பொருள் பாவனையில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது போதைப் பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு வருகைத் தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது பயன்பாடற்ற காணிகளினால் ஏற்படும் பாதுகாப்பின்மை, திருடர்களின் அட்டகாசம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் மகஜர் ஒன்றினையும் அவரிடம் கையளித்திருந்தனர்.

இதனையடுத்து போதைப் பொருள் பாவனையாளருக்கு சிகிச்சையளிக்க உதவுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

Social Share

Leave a Reply