அரசியலில் தீவிரமாக களமிறங்கும் விஜய் – இன்று நடைபெறவுள்ள முக்கிய சந்திப்பு!

தென்னிந்திய சினிமா துறையில் தவிர்கமுடியதாக முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஒக்டோபரில் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே நடிகர் விஜய் அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த, சமீபகாலமாக இணையத்தில் இந்த விடயம் பேசுபொருளாக மாறியிருந்தது. பெரும்பாலனர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அழுத்தம் கொடுத்தும் வந்தார்கள்.

இந்நிலையில் விஜய், மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில் இன்று (17.06) தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Social Share

Leave a Reply