லண்டன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர், எதிர்காலத்தில் கொரோனா-2 தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவும் சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், லண்டனில் கொரோனா-2 தொற்று குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா-2’ பாதிப்பில் இருந்து இம்முறை பிரித்தானிய மக்களை காப்பாற்றுவது சாத்தியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆய்வுகளுக்கு சாட்சியமளிக்க பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் அலெக்சாண்டர் மேலும் கூறுகையில், ‘கொரோனா-2’ வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.