பிரான்சில் நிலநடுக்கம்!

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டிடங்களின் சுவர்களில் வெடிப்புகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலநடுக்கத்தால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நிலநடுக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply