கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பேருந்துகளில் இருந்து வெளியேறும் புகைகயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் இவை இரண்டிற்கும் இதன் மூலம் தீர்வுக்காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்து பொது போக்குவரத்து ஊடகங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதே இதற்கான தீர்வாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், பேருந்துகள் மட்டுமன்றி மின்சார முச்சக்கர வண்டிகள், வேன்கள். ரயில்களையும் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையினால் நாடு முழுவதிலும் உள்ள நஷ்டத்தில் இயங்கும் பல டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குணவர்தன குறிப்பிட்டார்.