இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,000 ஐ கடந்துள்ளதாகவும், 27 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தரவுகளின் அடிப்படையில், மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரையில் 22,800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு அபாயம் உள்ள சுகாதார அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்துள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.