கண்டி வீதியின் ரதாவடுன்ன பகுதியில் இன்று (20.06) காலை எரிபொருள் பவுசர் ஒன்றுடன் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஐந்து இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைகளுக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.