வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாவை செலவிட்டாரா அலி சப்ரி?

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஏழு வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ருவிட்டரில் விளக்கமளித்துள்ள அலிசப்ரி, இந்த தகவல் முற்றிலும் தவறானது என கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த தொகையானது, 5 தேசிய பிரதிநிதிகளின் பயணத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில், இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் மற்றும் பிராந்திய மன்றம் ஆகியவற்றுக்காக 5 தேசிய பிரதிநிதிகள் பயணித்ததாகவும், 22 அதிகாரிகள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான இரண்டு இருதரப்பு விஜயங்களும் மேற்படி செலவில் உள்ளடங்கியுள்ளதகாவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் அலி சப்ரி தனது வெளிநாட்டு பயணங்களுக்காக 5 கோடி ரூபாயாயை செலவிட்டுள்ளதாக ஊடகவியளாலர் ஒருவர் தகவல் வெளியிட்டிருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கையைச் சேர்ந்த சக ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக அந்த ஊடகவியலாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி மேற்படி தொகையை 7 வெளிநாட்டு பயணங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply