டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான கடற்பரப்பில் காணாமல்போன நீர்மூழ்கி கப்பல்!

டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக் கடலில் காணாமல்போயுள்ளது.

குறித்த கப்பலில் ஐந்துபேர் பயணித்துள்ள நிலையில், அவர்ளை தேடுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அமெரிக்க கடலோரக் காவல்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ஏஜென்சி மற்றும் சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

1912 ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு தனது முதல் பயணத்தின் போது டைட்டானிக் ஒரு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த கப்பலில் பயணித்த 1500 பேர் உயிரிழந்தனர்.

Social Share

Leave a Reply