பாண் உட்பட பல பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் (ஒவ்வொன்றும்) விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (20.06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.