பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் மரணம் குறித்து விசாரணை!

பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனையில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டரை வயது குழந்தையொன்று கடந்த 25 ஆம் திகதி பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதன்போது மயக்க மருந்தை செலுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்பிரகாரம் மயக்கமருந்து செலுத்தப்பட்ட நிலையில், குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில், குழந்தைக்கு வழங்கப்பட்ட மயக்கமருந்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அவைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குழந்தை பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தே மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக பேராதனை மருத்துவமனையில் வழங்கப்பட்ட மயக்கமருந்து காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Social Share

Leave a Reply