கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை நாளைய தினம் (22.06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொம்பன்ன வீதியிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றை வழங்குவதாக வாக்குறுதி அளித்து 7 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த விவகாரம் தொடர்பில் கண்டி பிரதேசவாசி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கொழும்பு மோசடிப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Social Share

Leave a Reply