கொட்டாவை, பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் இன்று (21.06) மற்றுமோர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இதுவாகும்.
முன்னதாக ஹோமாகம, நியந்தகல பிரதேசத்திலும், கொஸ்கொட பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.