ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டமைக்காக முன்னாள் ஏஜி தப்புல டி லிவேரா கைது செய்யப்பட மாட்டார் என நீதிமன்றத்திற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், தாக்கல் செய்திருந்த மனு இன்று (22.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சதிப்புரட்சி தொடர்பான சர்ச்சைக் குறிய அறிக்கைகள் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக தபுல டி லிவேரா பல தடைவைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து மனுத்தாக்கல் செய்த அவர், ஏஜியாக இருந்த காலத்தில் அவரது செயல்களை கேள்வி கேட்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும், அவ்வாறு செய்தால், அது அட்டர்னி ஜெனரலாக தனது சிறப்புரிமைகளை மீறுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால், தன்னை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை டிஐடி தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இதற்கமைய மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.