ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) தெற்காசிய ஆணையத்தின் துணைத் தலைவராக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2023 தொடக்கம் 2025 வரை உரிய பதவியில் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்ற தெற்காசியாவுக்கான UNWTO கமிஷனின் 59வது கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது சுற்றுலா மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.