உலகக்கிண்ண தெரிவு தொடரின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் ஓமான் அணியினை இலங்கை அணி மிகவும் இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. ஓமான் அணி தமது முதலிரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் காரணமாக இலங்கை அணிக்கு சவால் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை.
இந்தப் போட்டியில் முதலில் துடிப்பாடிய ஓமான் அணி 30.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அயான் கான் 41 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 5 விக்கெட்களை கைப்பற்றினார். இது அவரின் இரண்டாவது ஐந்து விக்கெட் பெறுதியாகும். கடந்த போட்டியில் அவர் 06 விக்கெட்ளை கைப்பற்றியிருந்தார். லஹிரு குமார 03 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.
பத்திலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி விக்கெட் இழப்புகளின்றி 15 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதில் டிமுத் கருணாரட்ன 61 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் குழு B இல் முதலிடத்தை பெற்றுள்ளது இலங்கை அணி.
டிமுத் கருணாரட்ன மீண்டும் அணிக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் விளையாடிய ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்றுள்ள நான்காவது அரைச் சதம் இதுவாகும்.