இந்தியாவை உருட்டிய இங்கிலாந்து. கோலியின் தவறு.அஸ்வினின் ஒதுக்கல்.39 வயது அன்டர்ஸன். தொடர் யாருக்கு?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இந்தியாவின் தோல்வி தங்களாவே பெற்றுக் கொண்டது. இங்கிலாந்தில் வைத்து முதல் போட்டியில் சமநிலை, அடுத்த போட்டியில் வெற்றி என்று பலமான நிலையில் காணப்பட்ட இந்தியா அணி மோசமான இன்னிங்ஸ் தோல்வியினை சந்தித்துக் கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களின் நுட்பமின்மை மற்றும் போதிய தயார் படுத்தல்கள் இல்லமை இந்தியா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட மீள்வருகை வெற்றியின் முக்கிய காரணமாக அமைந்தது. 39 வயத்தில் ஜேம்ஸ் அன்டேர்சன் பந்துவீசி வருகின்றமை ஆச்சரியப்பட வைக்கிறது. அஷ்வின் இல்லாமல் விளையாடியது இந்தியா அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. சிறந்த பந்துவீச்சாளர். சகலதுறை வீரர். எவ்வாறான ஆடுகளங்களிலும் அவர் அணிக்கு தேவை. துடுப்பாட்டத்தில் பல போட்டிகளில் இந்தியா அணியினை காப்பாற்றியவரை அணியினால் நீக்கியது தவறு. அஷ்வினை இந்தியா அணியிலிருந்து ஓரம் கட்டுவதற்கான நடவடிக்கையா இது என்பதும் கேள்வியாக இருக்கின்றது. அடுத்த போட்டி நடைபெறவுள்ள நான்காவது போட்டி தொடரின் முடிவினை தீர்மானிக்கப்போகும் போட்டி. இங்கிலாந்துக்கு சாதகமான மைதானம். இந்தியாவுக்கு சார்பற்ற மைதானம். அதிக ஓட்டங்கள் பெறப்படுவது கடினம். முடிவினை தரப்போகும் மைதானத்தில் வெல்லப் போவது யார்?

Social Share

Leave a Reply