உலககிண்ண 20-20 இல் முதல் வெற்றி

ஓமான், பப்புவா நியூகினியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலககிண்ணம் 20-20 தொடரின் முதற் போட்டியில் ஓமான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய பப்புவா நியூகினியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் தலைவர் அசாட் வாலா 56 ஓட்டங்களை பெற்றார். சார்ள்ஸ் அம்னி 37 ஓட்டங்களையும், செசி போ 13 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் ஸீஸான் மக்சூட் 4 விக்கெட்களையும், பிலால் கான் 2 விக்கெட்களையும், கலிமுல்லா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் அணி 13.4 ஓவர்களில் விக்கெட்கள் இழப்பின்றி 131 ஓட்டங்களை பெற்றது. ஜட்டின்டர் சிங் 73 ஓட்டங்களையும், அக்கிப் இலியாஸ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக ஸீஸான் மக்சூட் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டி 7.30 இற்கு பங்களாதேஷ், ஸ்கொட்லாந்த்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

உலககிண்ண 20-20 இல் முதல் வெற்றி

Social Share

Leave a Reply