வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்பதே அனைவருக்கும் தெரிந்ததது. ஆனால் கடந்த அரசாங்கத்தில் தான் அமைச்சராக இருந்த பொழுது தனது அமைச்சின் கீழ் அவருக்கு பதவி வழங்கியதாக முன்நாள் அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
“அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கான ஆட்சி குழுவின் பணிப்பாளராக கடமையாற்றியவர். அவர் ஒரு சிறந்த மனிதர். என் நண்பர். சிறப்ப வேலைகளை செய்யக்கூடிய ஒருவர். வட மாகாணத்தில் நல்ல முறையில் செயற்படுவார் என நம்புகிறேன். ஆனால் உறுதியாக கூறிவிட முடியாது. எதிர்காலத்தில் என்ன செய்கிறார் என பார்ப்போம்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மூலமாக வட மாகாண அரசியல் தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்பாடல்களையும், இணைப்புகளையும் செய்து தமிழருக்கு தேவையான விடயங்களை செயற்படுத்த வேண்டுமெனவும், இந்த வாய்ப்பை சரியாக அனைவரும் பாவிக்க வேண்டுமெனவும் மேலும் மனோ MP கேட்டுக்கொண்டுள்ளார்.
