4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் நேற்று (23.06) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பஸ் நிலைய புதிய வர்த்தக நிலையத்திலுள்ள கடையின் வாரிசுரிமை தொடர்பான செயற்பாடுகளின்போதே உரிய இலஞ்சப் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை மாநகர சபையில் வைத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.