சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா A மற்றும் B வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply