அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய மொழிகள் பிரிவினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150மணித்தியாலயங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மற்றும் ஏனைய திணைக்களங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி பாடநெறியின் நிறைவு நாள் நிகழ்வு நேற்று முன்தினம் (22.06) இடம்பெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய மொழிகள் பிரிவின் வட மாகாண மத்திய நிலையத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பயிற்சி நெறியின் கற்கை வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாக குறித்த பயிற்சியின் நிறைவில் சிங்கள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் ஊடாக உத்தியோகத்தர்கள் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

150 மணித்தியாலயங்களைக் கொண்ட இவ் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியினை 85 உத்தியோகத்தர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.
இப்பயிற்சி வகுப்பானது உத்தியோகத்தர்களது சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்வதோடு கடமையின் போது வேலைகளை இலகுபடுத்திக்கொள்ளவும் அவர்களது ஆளுமை விருத்திக்கும் வழிவகுக்கின்றது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுடன் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் தேசிய மொழிகள் பிரிவின் உத்தியோகத்தர்கள், சிங்கள மொழி போதனாசிரியர்கள்,மற்றும் இரண்டாம் மொழி கற்கையினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!
அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!
அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!
அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!

Social Share

Leave a Reply