யாழ்ப்பாண மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
வீட்டுத் தோட்டத்தை ஊக்குவித்தல், சட்டஒழுங்கு விதிகளை கடைப்பிடித்தல், போதைவஸ்து பாவனையை தடுத்தல், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல், கிராம உத்தியோகத்தர்களுக்கான கடமைப்பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை முன்னெடுப்பதில் ஏற்படும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கிராம உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.