வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜூன் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 50,000 முதல் 100,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், முதல் முறையாக வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள முகவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் ஒருவர் 18 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது முறையாக அதே முகவர் நிலையத்தில் ஒப்பந்தம் செய்யும் ஒருவர் 3600 ரூபாவையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply