கனடாவிற்கான விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் ஒரு ஆண் மற்றும் 5 பெண்கள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைபாடுகளுக்கு அமைய நேற்று (26.06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து 03 மேசை கணினிகள், 03 மடிக்கணினிகள், 04 அச்சு இயந்திரங்கள், 01 ஸ்கேனர் இயந்திரம், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், பல்வேறு கடவுச்சீட்டுகள், தூதரகத்திற்கு அனுப்பத் தயாரிக்கப்பட்ட சொத்து மதிப்பு தொடர்பான ஆவணங்கள், பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 1,187,130 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சீதுவ, வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (27.06) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.