சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் 2023 இற்கான போட்டி அட்டவணை இன்று(27.06) சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண தொடரின் மிகப் பெரிய தொடராக இது கருதப்படுகிறது. ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக்கிண்ணம் இந்தியாவின் 10 பிரதேசங்களிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறவுள்ளன.
அஹமதாபாத் நரேந்திரா மோடி சர்வதேச மைதானத்தில் ஆரம்ப போட்டியும், இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன. ஏனைய போட்டிகளில் மீதமுள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன. கொல்கொத்தா ஈடின் கார்ட்னஸ் மற்றும் மும்பை வங்கடே ஆகிய மைதானங்களில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முதற் போட்டியில் மோதவுள்ளன. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் ஒக்டோபர் 8 ஆம் திகதி சென்னையில் மோதவுள்ளன. அஹமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் ஒக்டோபர் 15 ஆம் திகதி மோதவுள்ளன.
இலங்கை அணி தெரிவுகாண் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் அது நிறைவடைந்ததும் இலங்கை அணி பெறும் இடத்தை பொறுத்து தினங்கள் அவர்களுக்கு கிடைக்கவுள்ளன.
சகல அணிகளும் ஏனைய 9 அணிகளுடனும் ஒரு போட்டியில் மோதவுள்ளன. அவற்றில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும். அவற்றில் வெற்றி பெறுமணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 நடைபெறும் இடங்களின்படி அட்டவணை:
அகமதாபாத்
ஒக்டோபர் 5 – இங்கிலாந்து vs நியூசிலாந்து
ஒக்டோபர் 15 – இந்தியா vs பாகிஸ்தான்
நவம்பர் 4 – இங்கிலாந்து எதிராக அவுஸ்திரேலியா
நவம்பர் 10 – தென்னாபிரிக்கா vs ஆப்கானிஸ்தான்
19 நவம்பர் – இறுதிப் போட்டி
ஹைதராபாத்
ஒக்டோபர் 6 – பாகிஸ்தான் vs தெரிவுப்போட்டி 1
ஒக்டோபர் 9 – நியூசிலாந்து vs தெரிவுப்போட்டி 1
ஒக்டோபர் 12 – பாகிஸ்தான் vs தெரிவுப்போட்டி 2
தர்மசாலா
ஒக்டோபர் 7 – பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் (நாள் ஆட்டம்)
ஒக்டோபர் 10 – இங்கிலாந்து vs பங்களாதேஷ்
ஒக்டோபர் 16 – தென்னாபிரிக்கா vs தெரிவுப்போட்டி 1
ஒக்டோபர் 22 – இந்தியா vs நியூசிலாந்து
ஒக்டோபர் 29 – அவுஸ்திரேலியா vs நியூசிலாந்து (நாள் ஆட்டம்)
டெல்லி
ஒக்டோபர் 7 – தென்னாபிரிக்கா vs தெரிவுப்போட்டி 2
ஒக்டோபர் 11 – இந்தியா vs ஆப்கானிஸ்தான்
ஒக்டோபர் 15 – இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
ஒக்டோபர் 25 – அவுஸ்திரேலியா vs தெரிவுப்போட்டி 1
நவம்பர் 6 – பங்களாதேஷ் vs தெரிவுப்போட்டி 2
சென்னை
ஒக்டோபர் 8 – இந்தியா vs அவுஸ்திரேலியா
ஒக்டோபர் 14 – நியூசிலாந்து vs பங்களாதேஷ் (நாள் ஆட்டம்)
ஒக்டோபர் 18 – நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்
ஒக்டோபர் 23 – பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
ஒக்டோபர் 27 – பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
லக்னோ
ஒக்டோபர் 13 – அவுஸ்திரேலியா vs தென்னாபிரிக்கா
ஒக்டோபர் 17 – அவுஸ்திரேலியா vs தெரிவுப்போட்டி 2
21 ஒக்டோபர் – தெரிவுப்போட்டி 1 vs தெரிவுப்போட்டி 2 (நாள் ஆட்டம்)
ஒக்டோபர் 29 – இந்தியா vs இங்கிலாந்து
நவம்பர் 3 – தகுதிச் சுற்று 1 vs ஆப்கானிஸ்தான்
புனே
ஒக்டோபர் 19 – இந்தியா vs பங்களாதேஷ்
ஒக்டோபர் 30 – ஆப்கானிஸ்தான் vs தெரிவுப்போட்டி 2
நவம்பர் 1 – நியூசிலாந்து vs தென்னாபிரிக்கா
நவம்பர் 8 – இங்கிலாந்து vs தெரிவுப்போட்டி 1
நவம்பர் 12 – அவுஸ்திரேலியா vs பங்களாதேஷ் (நாள் ஆட்டம்)
பெங்களூரு
ஒக்டோபர் 20 – அவுஸ்திரேலியா vs பாகிஸ்தான்
ஒக்டோபர் 26 – இங்கிலாந்து vs தெரிவுப்போட்டி 2
நவம்பர் 4 – நியூசிலாந்து vs பாகிஸ்தான் (நாள் ஆட்டம்)
நவம்பர் 9 – நியூசிலாந்து vs தெரிவுப்போட்டி 2
நவம்பர் 11 – இந்தியா vs தெரிவுப்போட்டி 1
மும்பை
ஒக்டோபர் 21 – இங்கிலாந்து vs தென்னாபிரிக்கா
ஒக்டோபர் 24 – தென்னாபிரிக்கா vs பங்களாதேஷ்
நவம்பர் 2 – இந்தியா vs தெரிவுப்போட்டி 2
நவம்பர் 7 – அவுஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்
நவம்பர் 15 – அரையிறுதி 1
கொல்கத்தா
ஒக்டோபர் 28 – தெரிவுப்போட்டி 1 vs பங்களாதேஷ்
ஒக்டோபர் 31 – பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
நவம்பர் 5 – இந்தியா vs தென்னாபிரிக்கா
நவம்பர் 12 – இங்கிலாந்து vs பாகிஸ்தான்
நவம்பர் 16 – அரையிறுதி 2